சைட்டம் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

259 0

மாலபே தனியார் மருத்துவ கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் அரசங்கம் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடிவருவதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சங்சய ராஜரத்னம் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மருத்துவ சபை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ந்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம், வழக்கை நாளை வரை ஒத்திவைத்துள்ளது.

இதனுடன் அரசாங்கம் மற்றும் சைட்டம் பிரச்சினை குறித்த தரப்பினருக்கும் இடையே தீர்வு இருந்தால், அதனை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் இதன் போது உத்தரவிட்டுள்ளது.

Leave a comment