இராணுவத்தினரை கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்போவதாக அரசாங்கம் அறிவிப்பு!

265 0

சிறிலங்கா இராணுவத்தினரை கஞ்சா பயிர்ச்சைசெய்கையில் ஈடுபடுத்தப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டிற்கு மிகவும் அவசியமான மூலிகைகளான கஞ்சா மற்றும் அவின் போன்ற மூலப்பொருட்களை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றோம்.

இந்நிலையில், எமது நாட்டுக்குத் தேவையான மூலிகையான ககஞ்சாவை எமது நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Leave a comment