கஜன் – சுலக்ஷன் படுகொலை – காவல்துறையினருக்கு பிணை

308 0
யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 காவற்துறை அலுவலர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழங்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போதே அவர்கள் தலா 2 லட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி குளப்பிடி பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 காவற்துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் கடந்த 11 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment