சாட்சியமளிக்க தமக்கு விருப்பம் இல்லை – அர்ஜூன் அலோசியஸ்

308 0
பிணை மோசடி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க தமக்கு விருப்பம் இல்லை என அர்ஜூன் அலோசியஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும், பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அர்ஜூன் அலோசியஸ் சாட்சியளிக்க தயாரில்லை என நேற்று சட்டதரணி ஊடாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அர்ஜூன் அலோசியஸின் தொடர்பில் ஆணைக்குழு கொண்டுள்ள நிலைப்பாட்டை சட்டமா அதிபர் கண்டித்துள்ளார்.
இதனை பிரதி மன்றாடியார் நாயகம் இன்று ஆணைக்குழு முன் தெரிவித்தார்.

Leave a comment