மட்டக்களப்பு – திராய்மடுப் பிரதேசத்தில் தொடரூந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடரூந்த ஒன்றில் அவர் மோதுண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பலியானவர் 48 வயது மதிக்கத் தக்கவர் எனவும் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.