விடுவிக்கப்பட்ட மீனவ படகுகளை இலங்கையில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு கொண்டுச் செல்ல, இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
த ஹிந்து செய்தித்தாள் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக சிறைபடுத்தப்பட்ட 42 படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தது.
அவற்றில் 36 படகுகள் மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதாக அவற்றை ஆய்வு செய்த தமிழக மீவன பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவற்றை மீள தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு வழங்கும் வரையில் தமிழக அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட படகுகளில் 11 படகுகள் ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமானவை.
24 படகுகள் நாகப்பட்டிணம் மீனவர்களுக்குச் சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.