லலித் மற்றும் அனுஷவின் பிணை மனு தொடர்பில் சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரல்

255 0
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷா பெல்பிட்ட ஆகியோரின் பிணை மனு தொடர்பில் சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், சட்ட மா அதிபரை அறிவுறுத்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600மில்லியன் ரூபாவை, பிக்குகளுக்கான ஆடைக்கொள்வனவிற்காக பயன்படுத்தியமைக்க அவர்களுக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை கோரிய மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment