தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்டவர் வேன் மோதி, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனை நிறுத்த முற்பட்ட போதும், அவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலியானவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.