4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணக்கம்

257 0
2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படட இலங்கைத் தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
குறித்த பிரேரணையின் ஊடாக இலங்கையானது, 4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணங்கியுள்ளது.
இந்த இலக்கினை அடைவதற்கான கால அட்டவணை அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு சகல நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மறுசீரமைப்பு அலுவலகங்களை உருவாக்குவதும், மறுசீரமைப்பின் முன்னேற்றங்கள குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதும், 2015ம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு ஒப்பாகாது.
நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நீதிவழங்கப்படுகின்றது என்பதை மக்கள் ஆதாரப்பூர்வமாக உணரும் வகையில், ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

Leave a comment