கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் புதன்கிழமை (13.09.2017) கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்த நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றுவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவரை தாம் கைதுசெய்ததாக அவர் கூறினார்.
குறித்த நபர் வெள்ளிக்கிழமை (15.09.2017) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் சட்டவிரோத கசிப்பு, கஞ்சா உட்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 426 பேர் கைது செய்யப்பட்டு அவற்றில் பலர் நீதிமன்றல் முற்படுத்தப்பட்டும், இன்னும் பலர் முற்படுத்தப்படவுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் மேலும் தெரிவித்தார்.