கடந்த ஆட்சிக் காலத்தில் சீல் துணி விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கத் தயாராயின், அவருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.