வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா அக்டோபர் 2-ம் தேதி திறப்பு

270 0

அசாமில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பெய்த கனமழையால் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. புகழ்பெற்ற காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவிற்குள் வெள்ளம் புகுந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் ஏராளமான விலங்குகள் உயிரிழக்க நேரிட்டது. குறிப்பாக அரியவகை 21 காண்டா மிருகங்கள் உள்பட சுமார் 400 விலங்குகள் இறந்ததுடன், பூங்காவின் உட்கட்டமைப்புகளும் சிதைந்தன.

சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி பூங்கா திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், முதற்கட்டமாக கோகோரா மற்றும் பகோரி ஆகிய வனச்சரகங்கள் மட்டும் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும்.

அதன்பின்னர், சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்ட்டு, வழக்கமாக பூங்கா திறக்கப்படும் நாளான, நவம்பர் 2-ம் தேதி அனைத்து பகுதிகளும் பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a comment