மலேசியா: மத பள்ளியில் பயங்கர தீ விபத்து – மாணவர்கள் உள்பட 25 பேர் பலி என தகவல்

248 0

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத பள்ளிக்கூடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மத வழிபாட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அப்பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் பலியாகியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Leave a comment