விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார்

412 0

gotabayaமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் 90வீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார் எனவும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், கோத்தபாய ராஜபக்ஷ மீது இரண்டு முறைப்பாடுகள் தொடர் பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதில் சிறீலங்கா விமானப்படைக்கு 7மில்லியன் டொலர் செலவில் மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்தது முதலாவது முறைப்பாடு.

இரண்டாவதாக, டி.ஏ.ராஜபக்ஷ நினைவிடத்தை புனரமைப்புச் செய்வதற்காக 90மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியது.

இந்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரகளே 90 வீதம் நிறைவடைந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் அவர் பதிலளிக்கவேண்டிவரும்.

மேலும், முன்னைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடாத்துவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

ராஜபக்ஷ தனது குடும்பத்துக்கு கொள்ளையடிக்க விரும்புகின்றார். அதற்கு காலம் கடந்துவிட்டது.

சட்டத்தை மீறாத படையினர் எவரும் காணாமல் போனோர் பணியத்தினால் இலக்குவைக்கப்படமாட்டார்கள்.

இந்தப் பணியகம் வெளிநாட்டு சக்தியின் அழுத்தங்களுக்காக அமைக்கப்பட்டதல்ல.

சிறிலங்காவில் எல்லாமே வெளிப்படையாகவும், சட்டரீதியாகவும் நடைபெறுகிறது என்று அனைத்துலக சமூகத்துக்கு காட்டவே காணாமற்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.