மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகாலை வேளைகளில் கடும் பனி பொழிவுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை வேளைகளில், பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளதால் பொதுமக்களை அவதானத்து டன் நடந்து கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
குறிப்பாக ஊவா மாகாணத்தில் பனி யுடன் கூடிய காலநிலை நீடித்து வருவதாலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதாலும் வெட்டவெளி, மலை உச் சிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமன்றி மரங்களின் கீழ் நடமாடுபவர்களும் மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை மண்சரிவு அபாயம் நில வும் பகுதிகளில் வாழும் மக்களை அதிக மழை பெய்யுமிடத்து பாதுகாப் பான இடங்களுக்குச் செல்லுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.