சில் ஆடை” விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேற்படி இருவருக்கும் கடந்த 7 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு கடந்த 11 ஆம் திகதி முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முன்னிலையிலேயே மேன்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.