மூக்கை நுழைக்க வேண்டாம், பிக்குகள் யார் என்பதை காட்ட வேண்டி வரும்-மாகல் கந்தே சுதந்த தேரர்

266 0

தேவையற்ற முறையில் மூக்கை நுழைத்து இந்த நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என  ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு நாம் ஞாபகமூட்டுகின்றோம் என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்வீர்களாக இருந்தால், இந்நாட்டில் பௌத்த பிக்குகள் யார் என்பதை காட்டுவதற்கு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் தேரர் கடுமையாக கருத்துத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் பௌத்த பிக்குகளை நிந்திக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு ஆவேசமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

Leave a comment