இரு குடும்பத்தினருக்கு இடையில் மோதல்;மூவர் வைத்தியசாலையில்

262 0

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறி, கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில் இரு தரப்பில் இருந்தும் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று (12) மதியம் இடம்பெற்றுள்ளது. இரத்தினவேல் ராஜ்சுமன் வயது(28) என்ற அதே பகுதியினை சேர்ந்த இளஞன் மீது தலையில் கத்தியினால் வெட்டியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அதே போல் மற்றையதரப்பில் இருந்து வேலுப்பிள்ளை துரைராஜா வயது(57), துரைராஜா ராஹினி வயது(55) என்ற கணவன் மனைவி ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரு தரப்பில் இருந்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment