முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தவே அமெரிக்க விமானப்படையின் மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தவே ஐந்து அமெரிக்க மருத்துவக் குழு இலங்கை வந்தடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் கோரிக்கைக்கு அமையவே அவர்கள் இலங்கைக்கு பயணித்துள்ளனர்.
இந்தக் குழுவின் பயணத்திற்கான செலவினை வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதா என்பதைப் பரிசோதிக்க வெளிநாட்டு வைத்தியர்களின் அனுமதியை வடக்கு மாகாண சபை கோரியிருந்தது.
இதற்கமையவே இந்தக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.