தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் வைத்து இதனைத் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்ச்சியாக எம்மால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்தும் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முழுமையாக அவர்கள் ஏற்று கொள்ளாது விட்டாலும் ஓரளவேனும் புரிந்து கொண்டுள்ளனர்.
60 வருடகாலமாக இந்த பிரச்சினைகள் தொடர்வதாலேயே இன்னும் அது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இனியும் உரிமைகளுக்காக ஆயும் ஏந்தி போராட முடியாது.
ஆகவே எமது பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இதன் ஊடாக இரு தரப்பினரும் இணைந்து பிரச்சினைகளுக்கான தீர்வு வழிமுறைகள் குறித்து ஆராய்வதே சிறந்த ஒன்றாக அமையும் என சீவி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.