பணிப்புறக்கணிப்பை தொடர இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

260 0

பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமது போராட்டம் காரணமாக தற்போது பல பகுதிகளில் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

வேதன முரண்பாட்டைத் தீர்த்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மதியம் 12 மணி முதல் அவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்தும் நோக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மின்சார துறையைச் சேர்ந்த, அனைவரினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக, மின்சார சபையின் நிறைவேற்று அதிகாரியினால் நேற்று விசேட சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், சைட்டம் பிரச்சினையை முன்வைத்து அரச அதிகாரிகள் சங்கத்தினால் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று அநுராதப்புரம், குருநாகல், கண்டி, இரத்தினப்புரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் மருத்துவமனைகளை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.

Leave a comment