2020ஆம் ஆண்டு அதி சிறந்த பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகாந்துரயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்டுமானத்துறை மற்றும் ஏனைய நிதிசார் சேவைகளின் முன்னேற்றத்தின் ஊடாக சிறந்த பொருளாதாரம் கட்டி எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.