உலக பொருளாதார மன்றத்தின், பூகோள மனித மூலதன சுட்டெண் அடிப்படையிலான பட்டியலில் இலங்கைக்கு 70ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
130 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருநாடு எவ்வாறு தமது மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்கிறது என்பதை கணக்கிட்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகிறது.
இதில் தொழிலாளர் உரிமைகள், தொழிற்படை, கல்வித் தகமை, தொழிற்துறையினரின் தொழிற்சார் அறிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.
இந்த பட்டியலில் நோர்வே முதலாம்; இடத்தில் உள்ளது.
இந்தியா 103ம் இடத்தில் இருக்கிறது.