நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன் என தெரிவித்து, நுவரெலியா வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தை சேர்ந்த எம்.ஜி.பந்தல பண்டார என்பவர், மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சொந்த காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதிகளை பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள்.
இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இதற்கென 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பிரதேச செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.
இவ் அனுமதியை பெறுவதற்காக 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபா வரையான தொகையும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இருந்தும் எனக்கு சொந்தமான மரங்களை வெட்ட முடியாத சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
ஆகையால் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றேன்.
நான் வளர்த்த மரங்கள் உபயோகத்திற்காக வெட்டும் தருவாயில் உள்ளது.
இதன் மூலம் எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
என மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.ஜி.பந்தல பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.