வடக்கு மாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க பிணையில்…..(காணொளி)

575 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், சந்தேக நபரான வடக்கு மாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

குறித்த வழக்கு இன்று யாழ்.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

சந்தேகநபர்நார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையினை முன்வைத்தனர்

இதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் ஆஜனான அரச சட்டதடதரணி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார.;

எனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில், மன்று திருப்தியடைதாத காரணத்தினால் சந்தேகநபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று லட்சம் ரூபா காசு மற்றும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையுடன் பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கு இடம்பெறும் சந்தரப்பத்தில் சந்தேகநபர் வெளிநாட்டிற்கு செல்லத்தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும் குடிவரவு குடியகல்வு திண்ணைக்கள அதிகாரிகளுக்கு, சந்தேநபர் தொடர்பில் நீதிமன்ற பதிவாளரினால் அறிவிக்க கட்டளையிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமூகமளித்து கையொப்பொம் இடுமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு டிசெம்பர் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment