இலங்கை அணிக்கு முக்கியத்துவமானது மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி

336 0

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெறும் ஒற்றை ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகிறது.

இந்த போட்டி அயர்லாந்தின் பெல்பாஸ்ட் மைதானத்தில் இடம்பெறுகிறது.

இன்றைய இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடையும் பட்சத்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்து விடும்.

அதற்கு பதிலாக இலங்கை அணி நேரடியான தகுதியை பெறும்.

மாறாக இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுமாயின், இங்கிலாந்துடன் இடம்பெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 4க்கு 1 அல்லது 5க்கு பூச்சியம் என வெற்றி பெறவேண்டும்.

அவ்வாறு மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெறும் பட்சத்திலேயே உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு அந்த அணி நேரடி தகுதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

Leave a comment