இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் – ஐரோப்பிய ஒன்றியம் இன்று மகிழ்ச்சி

319 0

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பல விடயங்களில் இன்னும் மீளமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட நிலை அதிகாரிகள் பிரசல்ஸில் இருந்து வருகை தந்து கடந்த 10 நாட்களாக தகவல் அறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள 27 சர்வதேச சாசனங்களின் நடைமுறை அடிப்படைகளை வைத்துக் கொண்டு குறித்த அதிகாரிகள் இலங்கையில் அமைச்சர்கள், சமூக பணியாளர்கள், தொழிட்சங்கங்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தனர்.

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் சென்ற அவர்கள், வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனையும் சந்தித்தனர்.

அத்துடன் அவர்கள் மனித உரிமைகள் காப்பு பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுடன் இந்த குழுவினர் நடத்திய சந்திப்பின் போது இலங்கையில் எந்தளவான நிலவர மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் உண்மையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் முக்கிய விடயங்களில் இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

சித்தரவதைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்தை கொண்ட சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

என்பதை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு ஒருவரை கைது செய்யும் போது, சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்க வேண்டும்.

 

பொது மக்களின் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு நம்பிக்கை கட்டி எழுப்பப்பட வேண்டும்.

 

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுத்தியுள்ளது.

 

 

Leave a comment