சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கொழும்பு மேல்நீதிமன்றில் நாளை பரிசீலிக்கப்படவுள்ளது.
பிக்குகளுக்கான ஆடை பகிர்தளிப்ப மோசடி வழக்குத் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில், இந்த பிணைக் கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேல்நீதிமன்றின் தீர்ப்பை அதிகாரமற்றதாக்க வேண்டும் என அவர்களது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்வரை பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு மேல்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது