மேல் மாகாண அவைத் தலைவர் சுனில் ஜயமினி மற்றும் ஆளுங்கட்சி பிரதம அமைப்பாளராக குணசிறி ஜயநாத் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளும்கட்சியின் புதிய அமைப்பாளராக சந்தன ஜயகொடியும், அவைத் தலைவராக ஹெக்டர் பெத்மகேவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.