தங்காலையில் இன்று மதியம் கோர விபத்து! தந்தை , மகன் பலி

278 0

தங்காலை மாரகொல்லிய பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேரூந்து ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து முன்னால் சென்ற வாகனமொன்றை கடந்து செல்ல முற்பட்டுள்ள நிலையில் எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 42 வயது தந்தையும் மற்றும் அவரின் 6 வயது மகனுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment