அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கமும், இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தாபன விதிக்கோவைக்கு எதிராக செயற்பட்டு 5 பொது சுகாதார பரிசோதகர்களின் வேதனங்களை நிறுத்தி அவர்களை சேவையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். ரெலிகொம் முன்றலிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி, யாழ். பண்ணையிலுள்ள சுகாதார அமைச்சின் அலுவலகம் வரை சென்றது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண சுகாதார அமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.