விடுதலைப் புலிகளால் கடந்த யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா – மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டமொன்றில் இருந்து இந்த கைக்குண்டுகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.
பல வருடங்களுக்கு பின்னர் தனது வீட்டுத் தோட்டத்தை துப்பரவு செய்த நபரொருவர், அங்கு புதைக்கப்பட்டிருந்த குறித்த கைக்குண்டுகளை அவதானித்துள்ள நிலையில் , இது தொடர்பில் வவுனியா காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு சென்ற காவற்துறையினர் குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இவை பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டு இவ்வாறு புதைக்கப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்தது.