பெரிய வெங்காய பயிர்கள் முழுவதுமாக மழையால் அழிவடைந்த காரணத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தம்புள்ளை மருத்துவமனையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
தம்புள்ளை நகர திடீர் மரண பரிசோதகர் டீ .டபில்யூ ஜே பண்டார முன்னிலையில் , இன்று இந்த திடீர் மரண விசாரணை இடம்பெற்றது.
இதன் போது , சாட்சி வழங்கிய உயிரிழந்த நபரின் உறவினர்கள் , சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காய பயிர்கள் கடன் பட்டு பயிரிடப்பட்டிருந்த நிலையில் , இத்தினங்களில் நிலவும் அதிக மழை காரணமாக வெங்காய பயிர்கள் முழுவதுமாக அழிவடைந்துள்ளதால் மனமுடைந்து இவ்வாறு விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹபரணை புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.