சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி வவுனியாவை சென்றடைந்தது.

251 0

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்; நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை இன்று சென்றடைந்தது.

இந்த பேரணி வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலத்தரப்பினர் கலந்து கொண்டனர்.

Leave a comment