பாடசாலை சென்றுக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை பயமுறுத்திய குழுவொன்றை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று முற்பகல் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த மூன்று பேர் கூரிய ஆயுதங்களை காட்டி மஸ்கெலியா பிரதேசத்தின் பாடசாலையொன்றிற்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை இவ்வாறு பயமுறுத்தியிள்ளதாக காவற்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் அச்சமடைந்த 8 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் , எவ்வித உடல் பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் , மாணவர்கள் பயமுறுத்திய குறித்த குழுவினரை தேடி காவற்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மஸ்கெலியா மொன்டிபெயார் தோட்டத்தில் கிரீஸ் மனிதன் தொடர்பில் அச்சமேற்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.