தேடுதல் வேட்டையில் பெண் கமாண்டர் உள்பட 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

363 0

201608171050539635_commander-rank-woman-cadre-among-4-Naxals-killed-in_SECVPFசத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் பெண் கமாண்டர் உள்பட தடைசெய்யப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த நான்குபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தின் மலையடிவாரப் பகுதியில் உள்ள  டப்பா மற்றும் குன்ஹா கிராமங்களுக்கிடையே நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் சுக்மா மற்றும் தான்டேவாடா மாவட்டத்துக்கிடையே உள்ள அப்பகுதியை ரிசர்வ் போலீஸ் படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்றிரவு சுற்றிவளைத்தனர்.

அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண் கமாண்டர் மற்றுமொரு கமாண்டர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.