வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலியில் மியோலோ நகரைச் சேர்ந்தவர் மாசி மிலியானோ கேரீர் (45). இவரது மனைவி திஷியானா ஷாரா மெல்லா (42). இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மேற்கு நேபிள்ஸ் பகுதியில் பொசுபோலியில் உள்ள சல்பட்ரா என்ற எரிமலை பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றனர். அப்போது அந்த எரிமலை வெடிக்கும் தருவாயில் இருந்தது.
எரிமலை வாயில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது. அப்போது தம்பதியின் 11 வயது மகன் எரிமலையை அருகில் சென்று பார்க்க மிகவும் ஆசைப்பட்டான். அதை அவனது பெற்றோர் தடுத்தனர்.
இருந்தும் எதிர்பாராத நிலையில் திடீரென ஓடிச் சென்ற அவன் எரிமலை வாய் அருகே இருந்த 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்தான். அதை பார்த்த பெற்றோர் பதறி துடித்தனர். உடனே தனது மகனை காப்பாற்ற ஓடிச் சென்றனர்.
அப்போது திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அப்போது எரிமலை குழம்பு வெளியேறி வெள்ளம் போன்று ஓடி வந்தது. அதில் சிக்கி 7 வயது சிறுவனும், அவனது பெற்றோர் மாசி மிலியானோ- திசியானா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களில் 7 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்தான். அவன் எரிமலை அருகே செல்லாததால் தப்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.