ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று இந்தியா செல்கிறார்.
இரண்டுநாள் விஜயமாக இந்தியா வரும் அவர் இன்று பிற்பகல் குஜராத்தில்; செல்;கிறார்.
இந்தநிலையில், இன்று மாலை ஆமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதில், இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
அத்துடன், ஆமதாபாத்தில் நாளை இடம்பெறும் விழாவில் இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் மும்பை- ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் தொடரூந்து திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இருநாடுகளுக்கும் இடையே 15 ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திடவுள்ளனர்.