ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வருகிறார்.

237 0
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 36 ஆவது கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமக்கு விடுத்த அழைப்புக்கு அமைய, எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அவரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment