காணாமல் போனோர் அலுவலகம் நாளை மறுதினம் முதல் இயங்கும்

299 0
ஜனாதிபதியினால் கைச்சாத்தான காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படுத்துவது குறித்தான வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாதம் 15ஆம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், கடமைகள் மற்றும் இலக்குகள் செயற்படுத்தப்படும்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு இதில் கைச்சாத்திட்டுள்ளார்.

Leave a comment