எனது சிறுநீரகத்தை வழங்க தயார் – பாலித தெவரப்பெரும

290 0

மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரகல நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக தேவை ஏற்படின் அவருக்கு தனது சிறுநீரகமொன்றை வழங்க தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தனது மகனின் நினைவாகவே இவ்வாறு அன்பளிப்பு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment