நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம்

9107 0

நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கு மாணவ – மாணவிகளை தேர்வு செய்ய ‘நீட்’ எனும் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த தேர்வுக்கு மத்திய பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ- மாணவிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் டாக்டராகும் கனவுக்கு மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு முறை பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. அரியலூர் மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களுடன் 196.75 கட்ஆப் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வு முட்டுக்கட்டை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்தார்.

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களின் மன உணர்வை ஆதரிக்கும் வகையில் தி.மு.க. தலைமையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. கடந்த 4-ந்தேதி சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி திருச்சியில் கடந்த 8-ந்தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்த்து இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுவதும் 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

இதற்கிடையே ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், அமைதி வழியில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தீர்மான குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், தண்டபாணி, மேடவாக்கம் ரவி, ஜெயக் குமார், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, எம்.கே.டி.கார்த்திக், பிரபு.

கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ரூபி மனோகரன், சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம், காஞ்சி சங்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மேகநாதன், விடுதலை சிறுத்தை மண்டல செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள் அப்துல் வகாப், தாவூத், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் யாக்கூப், மாவட்டச் செயலாளர் சலீக்கான், ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முத்தையன், சண்முகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இளமாறன், விவசாயிகள் தொழிலாளர் கட்சி ஜெகதீசன், த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் சலீம் பாஷா, பொருளாளர் முகமது ரபீ ஏராளமான மாணவர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை செயலாளர் அப்துல் ரகுமான், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ், கட்டிடத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்குமார், விடுதலை சிறுத்தை பொருளாளர் முகமது யூசூப், முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில நிர்வாக குழு உறுப்பினர் குனங்குடி அனிபா.

தமிழ் மாநில தேசிய லீக் திருவான்மியூர் காஜா, திராவிடர் கழகம் செயலாளர் வில்வநாதன், திராவிடர் தமிழர் இயக்க பேரவை அமைப்புச் செயலாளர் மு.மாறன், விவசாய தொழிலாளர் கட்சித் தலைவர் மா.சுப்பிரமணியன்.

தி.மு.க. நிர்வாகிகள் பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், ஆலந்தூர் குணா, சந்திரன், சைதை குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கே.கே.நகர் தனசேகரன், மகேஷ்குமார், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கோல்டு பிரகாஷ், கிருஷ்ண குமார் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், 2 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்றனர்.

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம் உள்பட ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இவர்களுடன் தி.மு.க. நிர்வாகிகள், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. பொன்னுரங்கம், கென்னடி, ஏழுமலை, ஜெ.கருணாநிதி, அகஸ்டின்பாபு, காமராஜ், மதன்மோகன், மாணவரணி மோகன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செல்வசிங், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்பட ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர்.

Leave a comment