இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று மதியம் 12 மணி தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை சங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே மின்சார சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.