களுத்துறை மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் புளத்தசிங்கள, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அப்பகுதிகளில் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது