மருத்துவ பீட குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று மாலிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.