கிளிநொச்சு உருத்திரபுரம் பகுதியில் வீட்டில் தந்தை பாம்புக்கடிக்கு இலக்கான தகவலையறிந்த தனையன் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தவேளையில் விபத்திற்குள்ளான நிலையில் ஓர்கால் முறிவடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தல் அதே இடத்தைச் சேர்ந்த பேரம்பலம் வயது 55 என்பவரே பாம்புக் கடிக்கு இலக்கானதோடு இவரின் மகனான விஜேந்திரன் வயது 20 என்பரே மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்தவராவார்.
உருத்திரபுரம் பகுதியில் வீட்டில் இருந்த தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். இவ்வாறு தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சமயம் மகன் வயலில் பணியின் நிமித்தம் நின்றிரிந்தார். அச்சமயம் பிறிதொருவரின் மூலம் குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவலையறிந்த தனையன் பதட்டத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு விரைந்துள்ளார்.
இவ்வாறு பயணித்தவேளையில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளான நிலையில் தனயன் ஓர்கால முறிவடைந்த நிலையிலிலும் தந்தையும் தற்போது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.