அமெரிக்காவிற்கு வடகொரியா மீண்டும் அச்சுறுத்தியுள்ளது. 

383 0

அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தவிருப்பதாக வடகொரியா அச்சுறுத்தியுள்ளது.

வடகொரியா அண்மையில் தமது ஆறாவது அணுகுண்டு சோதனையை மேற்கொண்டிருந்தது.

இதனை அடுத்து வடகொரியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையிலான புதிய பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது.

இதற்கான யோசனையை அமெரிக்காவே முன்வைத்தது.

இந்த நிலையில் வடகொரியா இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று, ஐக்கிய நாடுகளுக்கான வடகொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment