தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் முதன்முறையாக கூடியது.

255 0

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றையதினம் முதன்முறையாக ஒன்று கூடியது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அமைச்சர்களான சரத் அமுனுகம மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோருடன், பல்வேறு அமைச்சுகளின் செயலாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த சபையின் தலைமை செயலாளராக பேராசிரியர் லலித் சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த சபை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment