லிந்துலை விபத்து – ஒருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் 

285 0

லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் பலியாகினார்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்கைகளுக்காக நுவரெலியா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களின் ஒருவரின் தலையில் கடும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் டயகம நகரத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவி ஒருபர் பலியானார்.

பாரவூர்தி ஒன்றில் மோதுண்டு குறித்த மாணவி ஸ்தலத்திலேயே பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி டயகம கிழக்கு தமிழ் பாடசாலையில் கல்வி கற்றவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியாவில் இடம்பெற்ற கல்விச் செயற்பாடு தொடர்பான நிகழ்வொன்றில் கலந்துவிட்டு, வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விபத்துக்கு காரணமாக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment