ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை – அர்ஜுன் அலோசியஸ் 

263 0

பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை என்று அர்ஜுன் அலோசியஸ் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்து ஐந்து தினங்களாக இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதன்போது மேலும் தமக்கு இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக விருப்பமில்லை என்றும், அதனால் தம்மை இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாவதில் இருந்து விடுவிக்குமாறும் அவர் கோரியதாக கூறப்படுகிறது.

சட்டத்தரணி ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் ஆணைக்குழு தீர்மானித்து அறிவிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அர்ஜுன் அலோசியசை இன்றையதினமும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பாணையை நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரது இல்லத்திற்கு சென்று கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment